ஆப்நகரம்

அப்துல் கலாம் எங்கள் பிரதமர்: எல்லையில் உள்ள குழந்தைகளின் அறியாமை!

பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தானின் எல்லைப் பகுதி சிறுவர்கள் பலருக்கும் நம் நாட்டின் பிரதமர் யார் என்றுகூட இன்னமும் தெரியாத அளவுக்கு கல்வித்தரம் பரிதாபமாக உள்ளது.

TNN 25 May 2017, 4:42 pm
பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தானின் எல்லைப் பகுதி சிறுவர்கள் பலருக்கும் நம் நாட்டின் பிரதமர் யார் என்றுகூட இன்னமும் தெரியாத அளவுக்கு கல்வித்தரம் பரிதாபமாக உள்ளது.
Samayam Tamil for these students in border schools abdul kalam is the pm
அப்துல் கலாம் எங்கள் பிரதமர்: எல்லையில் உள்ள குழந்தைகளின் அறியாமை!


ராஜஸ்தான் மாநிலம், பாகிஸ்தான் உடன் பெருமளவு எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களில் ஒன்றாகும். இங்குள்ள பார்மர், ஜெய்சால்மர் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குப் போதிய பாடசாலைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பாடம் சொல்லித்தர ஆசிரியரும் அதிகம் இல்லை.

இதனால், ஷாகார், ஹர்னு, கிஷான்கார் உள்ளிட்ட கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் மூடியே உள்ளன. சிறுவர்கள் பலரும் பள்ளி செல்லாமல், கல்வியறிவு இன்றி காணப்படுகின்றனர்.

அந்த சுற்றுவட்டாரத்தில் கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு எந்த பள்ளியும் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. வியக்கத்தக்கும் வகையில், பாச்சியாசூட் என்ற இடத்தில் ஒரே ஒரு பள்ளி மட்டும் இயங்குகிறது. இங்கு, 12ம் வகுப்பு வரை சொல்லித் தர முடியும் என்றாலும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, 4ம் வகுப்பு வரை மட்டுமே பாடம் கற்பிக்கப்படுகிறது.

இந்த பள்ளியின் கல்வித்தரம் பற்றி சொல்லப்போனால், அங்கு 47 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில் பலருக்கும் இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர் யார் போன்ற அடிப்படை பொது அறிவு கூட தெரியவில்லை. பலரும், இந்தியப் பிரதமர் அப்துல் கலாம் என்றே இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமில்ல. இந்திய தேசிய பாடல் ஜன கண மன பற்றிகூட சிறுவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

இந்த அளவுக்கு கல்வித்தரம் மிக சீர்கெட்டுள்ளதாக, ராஜஸ்தான் மாநில கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தெரியவந்ததும், ஆசிரியர் நியமனத்தை விரைவுபடுத்தி, இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று, கல்வித் துறை சார்பாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Students in schools of border areas don't know who is the President or Prime Minister.

அடுத்த செய்தி