ஆப்நகரம்

பொருளாதாரம் 100% டேமேஜ்: ப.சிதம்பரம் வேதனை ட்விட்!!

நாட்டின் பொருளாதாரம் 100 சதவீதம் குலைந்துவிட்டதாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 May 2020, 7:32 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil pc


இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மே 10) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இவ்வளவு கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களா?

அதில், " மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்துவிட்டது, ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்துவிட்டன.

இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்?. நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும், அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும்.

தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்" என்று ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி