ஆப்நகரம்

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சாய் பிரனீத் 196வது ரேங்க்!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சாய் பிரனீத் 196வது ரேங்க் எடுத்துள்ளார்.

Samayam Tamil 28 Apr 2018, 11:54 am
ஐதராபாத்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சாய் பிரனீத் 196வது ரேங்க் எடுத்துள்ளார்.
Samayam Tamil IAS Topper
சாய் பிரனீத்


2017ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றுள்ளனர்.

அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமிலினேனி பார்கவ் தேஜா 88வது ரேங்க் எடுத்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விவி லட்சுமிநாராயணாவின் மகன் சாய் பிரனீத் 196வது ரேங்க் பிடித்துள்ளார்.

சாய் பிரனீத் குடும்பம்

கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பலகுப்தம் மந்தலைச் சேர்ந்த சூர்யா சாய் பிரவீன் 512வது ரேங்க் எடுத்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து தேர்வான பிற மாணவர்கள்:

* சீலாம் சாய் தேஜா(43வது ரேங்க்)

* நரபுரெட்டி மௌரியா(100வது ரேங்க்)

* ஜி மாதுரி(144வது ரேங்க்)

* விவேக் ஜான்ஸ்சன்(195வது ரேங்க்)

* ஒய் அக்‌ஷய் குமார்(624வது ரேங்க்)

* பார்கவ் சேகர்(816வது ரேங்க்)

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு அக்டோபர் 28, 2017 முதல் நவம்பர் 3, 2017 வரை நடைபெற்றன. அதில் 750 மாணவர்கள், 240 மாணவிகள் என 990 பேர் தேர்வு பெற்று நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Former IPS officer VV Lakshminarayana’s son V Sai Praneeth bagged 196th rank in Civil Services.

அடுத்த செய்தி