ஆப்நகரம்

மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு சிறுநீரக டயாலஸிஸ்

முன்னாள் பிரதமர் அட்டல்பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக டயாலஸிஸ் நடப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 10:37 pm
புதுடெல்லி : முன்னாள் பிரதமர் அட்டல்பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக டயாலஸிஸ் நடப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Samayam Tamil vajpayee


1998-2004 வரை இந்திய பிரதமாராக பொறுப்பு வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். இவருக்கு வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வாஜ்பாய்க்கு சிறுநீரக டயாலஸிஸ் செய்து வருவதாகஎய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
எம்ய்ஸ் மருத்துவமனைக்கு சென்ற மத்திய அமைச்சர் விஜய் கோயல் வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு சிகிச்சை நடைப்பெறுவதாக தெரிவித்துள்ளார்.


மோடி நலம் விசாரிப்பு:
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாயை சந்தித்துள்ளனர்.

அடுத்த செய்தி