ஆப்நகரம்

ரயிலில் வழங்கும் உணவு சகிக்க முடியல; முன்னாள் ரயில்வே அமைச்சர்

ரயில் பயணத்தில் கொடுக்கப்பட்ட எலுமிச்சை ஜீசை வாயில் வைக்க முடியாத அளவுக்கு கேவலமாக இருந்ததாக முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.

TNN 2 Oct 2017, 9:21 pm
ரயில் பயணத்தில் கொடுக்கப்பட்ட எலுமிச்சை ஜீசை வாயில் வைக்க முடியாத அளவுக்கு கேவலமாக இருந்ததாக முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.
Samayam Tamil former railway minister dinesh trivedi exposes poor hygiene in premium trains
ரயிலில் வழங்கும் உணவு சகிக்க முடியல; முன்னாள் ரயில்வே அமைச்சர்

தசரா பண்டிகையை முன்னிட்டு முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, கத்தோடம் – சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 நாட்களுக்கு முன்பு பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஐஆர்சிடிசி சார்பில் எலுமிச்சை ஜீஸ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை குடித்த அமைச்சருக்கு குமட்டல் வந்துள்ளது. பின்னர், கவனித்த அவர், தனக்கு வழங்கப்பட்ட ஜூஸ் கெட்டுப் போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து ரயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தப்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரயில்வே நிர்வாகம் இருப்பில் உள்ள உணவு பொருட்களை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ரயில் கட்டணத்தை உயர்த்திய சர்ச்சையில் சிக்கியதற்காக தினேஷ் திரிவேதி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி