ஆப்நகரம்

சந்திரயான் - 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

நிலவில் விக்ரம் லேண்டர் எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Sep 2019, 2:04 pm
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து படிப்படியாக விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.
Samayam Tamil Sivan


இது நேற்று அதிகாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சவால் நிறைந்த பணியில், நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருக்கும் போது, லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தாலும் கைகொடுத்த ஆர்பிட்டர்!

இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும் நிலவை 100 கி.மீ தொலைவில் சுற்றி வரும் ஆர்பிட்டர் பகுதி, ஓராண்டிற்கு இயங்கி நிலவின் புகைப்படங்களை தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லாண்டர் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் முயற்சி

இந்நிலையில் தற்போது விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

அது நிலவின் மேற்பரப்பில் இருக்கிறது. இதனை ஆர்பிட்டர் கருவி புகைப்படம் எடுத்துள்ளது. லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

கண்ணீர் விட்ட சிவன்; ஆறுதல்படுத்திய பிரதமர் மோடி!!

அடுத்த செய்தி