ஆப்நகரம்

காஷ்மீர் ட்ரக்கில் பயங்கரவாதிகள் பதுங்கல்; தாறுமாறு என்கவுன்ட்டர் - பலே திட்டம் க்ளோஸ்!

ஊடுருவல் முயற்சியை அடுத்து பயங்கரவாதிகள் மீது இன்று அதிகாலை என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 12:41 pm
ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்த ட்ரக் ஒன்றில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நான்கு பேர் ஒளிந்திருந்தனர். இவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு நோக்கி பயணித்துள்ளனர். அங்கு மிகப்பெரிய சதித்திட்டம் ஒன்றை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. முன்னதாக சம்பா செக்டாரில் இருந்து நக்ரோதா நோக்கி பயங்கரவாதிகள் சென்று கொண்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நக்ரோதா அருகேவுள்ள பேன் சுங்கச் சாவடியில் ட்ரக்கை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர்.
Samayam Tamil Kashmir Attack


அப்போது பயங்கரவாதிகளுக்கு, பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. கையெறி குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. சி.ஆர்.பி.எப் வீரர்களும் பதிலடியில் கரம் கோர்த்துள்ளனர். உடனே கூடுதல் படையை வரவழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு: வெளியானது முக்கிய அறிவிப்பு!

இந்த தாக்குதல் சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் ட்ரக் ஓட்டுநர் தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. அந்த ட்ரக்கில் இருந்து 11 ஏகே-47 துப்பாக்கிகள், மூன்று பிஸ்டல்கள், 29 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம் போட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏராளமானோர் வாக்களிக்க செல்வர்.

இதனை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி