ஆப்நகரம்

உத்தரகண்ட் வனப்பகுதி தீவிபத்து: 4 பேர் கைது

உத்தரகண்ட் மாநில வனப் பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த தீயை வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 2 May 2016, 12:47 pm
உத்தரகண்ட் மாநில வனப் பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த தீயை வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil four people arrested today environment minister prakash javadekar on uttarakhandforest
உத்தரகண்ட் வனப்பகுதி தீவிபத்து: 4 பேர் கைது


இதன் மூலம் உத்தரகண்ட் மாநில வனப்பகுதி தீ விபத்துக்கு காரணம் மாபியா கும்பல் என்பது தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ''இந்த தீ விபத்து மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டதுதான். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார். Four people arrested today: Environment Minister Prakash Javadekar on if #UttarakhandForestFire was a man-made fire pic.twitter.com/HX3aOoTKUa— ANI (@ANI_news) May 2, 2016 மரங்களை கடத்தி விற்கும் மாபியா கும்பல், வனப்பகுதி வளர்ச்சி கழகத்துடன் இணைந்து இந்த தீயை வைத்து இருப்பதாக தற்போது செய்தி கசிந்துள்ளது. தற்போது வரைக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இந்த எரிந்த மரங்களை மாபியா கும்பலுக்கு விற்கும்போது, வன வளர்ச்சிக் கழகத்துக்கும் லாபம் என்ற வர்த்தக ரீதியில் இந்த தீயை வைத்து இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.

இந்தளவிற்கு தீப் பிடிப்பதற்கான காரணம் என்ன? இது மனிதரால் ஏற்படுத்தப்பட்டதுதான் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜவடேகரும் இதை உறுதிபடுத்தும் வகையில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி