ஆப்நகரம்

கொரோனா நோயாளிகளுக்கு அதிர்ச்சி; அந்தப் பிரச்சினை இருந்தால் கதை முடிஞ்சுது!

எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு பெரிய ஆபத்து காத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 24 Oct 2020, 11:33 am
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியிருக்கிறது. ஏற்கனவே உடல்நலப் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு கொரோனா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. இது உயிர் பலியாகும் அளவிற்கு நிலைமை விபரீதமாகிறது. இந்நிலையில் எண்டோகிரைன் சொசைட்டியின் ஜார்னல் ஆஃப் கிளினிகல் எண்டோகிரினாலஜி & மெடபாலிசத்தில் சில ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், முதுகெலும்பு முறிவுகள் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உயிரிழப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 114 கொரோனா நோயாளிகளின் எக்ஸ்ரேக்களை ஆய்வு செய்துள்ளனர்.
Samayam Tamil corona death in India


அதில் 35 சதவீத பேருக்கு முதுகெலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. இவர்கள் வயதானவர்கள், அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மற்றும் இதய நோய் உடையவர்கள் ஆவர். இவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் அதிகம் தேவைப்படுகின்றன.

இவர்கள் முதுகெலும்பு முறிவுகள் இல்லாத நோயாளிகளை விட இறப்பதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளனர். சுருக்கமாக கூற வேண்டுமெனில், அதிக எலும்பு முறிவுகள் கொரோனா நோயாளிகளுக்கு இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துகின்றன.

பிளாஸ்மா தெரபி கொரோனாவை முழுசா குணப்படுத்துமா? நம்ப முடியாத ஷாக்!

பொதுவாக தண்டுவட முறிவு ஏற்படும் போது முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை அதிகப்படியான வலி மற்றும் சிதைவு போன்ற தொந்தரவுகளை உண்டாக்குகின்றன. அதுவும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களிடம் அதிக எதிர்வினை ஆற்றுகின்றன.

எனவே இத்தகைய பாதிப்பு கொண்டவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வெளியிடங்களில் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது சிறந்தது.

அடுத்த செய்தி