ஆப்நகரம்

ரபேல் போர்விமான சர்ச்சை இந்தியாவுடனான உறவில் சிக்கல்? பிரான்ஸ் அரசு அச்சம்

ஹாலண்டே சர்ச்சை கருத்தால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பிரான்ஸ் அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியியுறவுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Sep 2018, 10:58 am
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல்போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ஆம் ஆண்டு மோடிஅரசு ஒப்பந்தம் செய்துகொண்டது.
Samayam Tamil rafale-759


ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயில் ஹாலண்டே உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கு அனில் அம்பானியின் ’ரிலையன்ஸ் டிபன்ஸ்‘ நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது என்று கூறினார்.

ஹாலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசும் மறுத்துள்ளது. டசால்ட் நிறுவனமும் ரிலையன்ஸ்சும் செய்துகொண்ட ஒப்பந்தம் என்றும் இதில் தங்களுடைய தலையீடு எதுவும் இல்லை என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளது.ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின்மூலம் மத்திய அரசு ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் வெளியியுறவுத்துறை இணையமைச்சர் ஜூன் பாப்டிஸ்ட் லெமோயன் பாரீஸில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ’வெளிநாடுகளைப் பற்றி அவசியமற்ற கருத்தைத் தெரிவிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. பதவியில் இல்லாத நபரின் சர்ச்சைக்குறிய பேச்சால் இந்தியா-பிரான்ஸ் உறவில் சிக்கல் ஏற்படுமோ என்று அச்சம்உள்ளது என்று கூறினார்.

அடுத்த செய்தி