ஆப்நகரம்

முற்றிலும் இலவசம்; கொரோனாவை விரட்டியடிக்க முயற்சியில் ஆச்சரியம் - அசத்தும் மாநில அரசு!

மாநில அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்பிற்கு இலவச சிகிச்சை பெற்றவர்கள் தொடர்பான விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Jun 2020, 12:01 pm
மகாராஷ்டிர மாநில அரசால் மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்யா யோஜனா(MJPJAY) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 82 சதவீத கொரோனா நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றுள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி 1,00,985(82.78%) கொரோனா நோயாளிகள் MJPJAY திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக இதில் அரசு மருத்துவமனைகள் பெரும்பங்கு வகித்துள்ளன.
Samayam Tamil Coronavirus Treatment for Free


மேலும் 18,228(14.94%) பேர் மட்டும் தனியார் மருத்துவமனைகளில் MJPJAY திட்டத்தின் கீழ் அல்லாமல் சிகிச்சை பெற்றுள்ளனர். மத்திய அரசு அல்லது பாதுகாப்பு அல்லது ரயில்வே மருத்துவமனைகளில் 2,778 பேர் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். மும்பையில் MJPJAY திட்டத்தின் கீழ் 52,000 கோவிட்-19 நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்!

இந்த திட்டத்தின் கீழ் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு ரூ.300 கோடி மாநில அரசு நிதியுதவி அளித்துள்ளது. இதுபற்றி MJPJAY திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி சுதாகர் ஷிண்டே கூறுகையில், தரவுகளின் மூலம் ஏராளமான நோயாளிகள் இலவச சிகிச்சையால் பயன்பெற்றுள்ளனர்.

வேறெந்த மாநிலத்திலும் நிகழாத மிகப்பெரிய எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலான மக்களே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். அங்கேயும் கட்டண நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த திட்டம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உதவி எண்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதன்படி 155388 என்ற எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை வெள்ளை ரேஷன் கார்டுகள் வைத்திருப்போருக்கும் விரிவுபடுத்தி உள்ளோம் என்றார். கடந்த மே மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில், MJPJAY திட்டத்தின் கீழ் 100 சதவீத இலவச மருத்துவ சிகிச்சையை அளிக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தெற்கில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - புதிய பாதிப்புகளால் திணறும் இந்தியா!

இது பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த வசதி சம்பந்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி