ஆப்நகரம்

ஆள்மாறி நடைபெற்ற இறுதிச்சடங்கு; இறந்ததாக கருதப்பட்ட நபா் திரும்பி வந்ததால் அதிா்ச்சி

விபத்தில் இறந்ததாக கூறி இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில், இறந்துவிட்டதாக கருதிய கணவா் 10 மாதங்களுக்கு பிறகு உயிருடன் திரும்பி வந்ததால் அவரை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்தார்.

TOI Contributor 11 Sep 2017, 5:27 pm
விபத்தில் இறந்ததாக கூறி இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில், இறந்துவிட்டதாக கருதிய கணவா் 10 மாதங்களுக்கு பிறகு உயிருடன் திரும்பி வந்ததால் அவரை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்தார்.
Samayam Tamil funeral nab is thought to have been dead because he came back
ஆள்மாறி நடைபெற்ற இறுதிச்சடங்கு; இறந்ததாக கருதப்பட்ட நபா் திரும்பி வந்ததால் அதிா்ச்சி


விதவை கோலத்தில் இருந்த அந்த பெண் நேற்று பழனியில் முருகனை தரிசித்து விட்டு உறவினர்களுடன் படிக்கட்டுகளில் இறங்கி கொண்டிருந்தார். எதிரே வந்தவரை பார்த்ததும் என்னுடைய கணவர் என்றபடி ஓடிச்சென்று கட்டித்தழுவி கண்ணீர்விட்ட அந்த கேரள பெண்ணை பார்த்ததும் அங்கு நின்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி கணவர் பெயர் கிருஷ்ணன் குட்டி கேரள மாநிலம் கொல்லங்கோடு வடக்கதரையை சேர்ந்தவர்கள். கிருஷ்ணன் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் கிருஷ்ணன்குட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவர் எங்கே சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அவர் வீட்டை விட்டுச் சென்ற சில நாட்களில் கோவை உக்கடத்தில் இருந்து காவல் துறையினர் கேரளா சென்றனர். அங்கு ராஜேஸ்வரியை சந்தித்து சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ஒருவர் கிருஷ்ண சந்திரன் என்கிறார். அது காணாமல் போன உங்கள் கணவர்தானா என்று பாருங்கள் என்று தொிவித்துள்ளனா்.

போட்டோவில் இருந்தவர் தலைநிறைய முடியும் தாடியுமாக இருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இவர் எனது கணவரில்லை என்றார் ராஜேஸ்வரி.
அடுத்த சில நாட்களில் கிருஷ்ணசந்திரன் இறந்து போனார். இதையடுத்து மீண்டும் ராஜேஸ்வரியையும், அவரது உறவினர்களையும் அழைத்து நன்றாக அடையாளம் பார்க்கும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டார்கள்.

என் கணவருக்கு கையில் ஒரு வெட்டுத்தழும்பு, முதுகில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் என்றார். அதனை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அவர் சொன்ன அடையாளங்கள் அனைத்தும் அப்படியே இருந்தன. அதை வைத்து இறந்தது தன் கணவர்தான் என்று ராஜேஸ்வரி உறுதி செய்தாா். பின்னர் உடலை பெற்று இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ராஜேஸ்வரியை உறவினர்கள் ஆறுதலுக்காக கோவில்களுக்கு செல்லலாம் என்று பழனிக்கு அழைத்து வந்துள்ளார்கள். அங்குதான் இறந்து போனதாக கருதப்பட்ட தனது கணவர் தன் கண் முன்னால் வந்ததை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். கிருஷ்ணன் குட்டி கிடைத்ததும் ராஜேஸ்வரியும் அவரது உறவினர்களும் ஆனந்தம் அடைந்தனர்.

இந்தநிலையில் புதைக்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தவறு எங்கே நடந்தது? என்பது குறித்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி