ஆப்நகரம்

காந்திஜி கொல்லப்பட்டபோது ‘ஹே ராம்’ சொல்லவில்லை... இதோ ஆதாரம்

காந்திஜி இறக்கும்போது அருகில் இருந்த பத்திரிகையாளரும், நாத்துராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவும், காந்தி ‘ஹே ராம்’ என்று சொல்லவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்கின்றனர்.

Samayam Tamil 30 Jan 2020, 10:03 pm
1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள். ‘நாதுராம் கோட்சே’வால் சுட்டுக்கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி என்று அறியப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இது வரலாற்றுச் செய்தி. அதே சமயம், இறக்கும் போது காந்தி ஹே ராம் என்று சொல்லிவிட்டு இறந்தார் என்பது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் சர்ச்சைத் தகவல்.
Samayam Tamil gandhi died


இதனை உறுதி செய்யும் விதமாக தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் நிலையில், ஆதாரங்களுடன் இதனை அணுகவேண்டிய கட்டாயம் இந்த சர்ச்சையை அறிந்த எல்லோருக்கும் உள்ளது.

"அதிகாரப் பூர்வமான செய்திகள், 'ஹே ராம்' என்று காந்தி மகான் சொன்னதாக வந்தது. ஆனால், அவ்வளவு உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை! இறப்பதற்கு முன் அவர் எந்த வார்த்தையும் சொல்லவில்லை என்பதே எனக்கு ஞாபகம்!" என்று ஜேம்ஸ் மைக்கேல்ஸ் இது குறித்து அண்மையில் அளித்துள்ள விளக்கம் இதனை உறுதி செய்யவல்லது.

இப்போது யார் இந்த ஜேம் மைக்கேல் என்ற கேள்வி எழலாம். காந்தி இறந்தபோது, அந்தச் செய்தியை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த முதல் செய்தியாளர் ஜேம்ஸ் மைக்கேல்ஸ் தான். சம்பவத்தின் போது நேரில் பார்த்த சாட்சி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது UPI என்ற செய்தி நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து கொண்டிருந்தார்

அதன்பிறகு, 1997ல் புகழ்பெற்ற 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, மும்பையில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் , இந்த 'ஹே ராம்' சர்ச்சை குறித்து அவர் அளித்த விளக்கம்தான் மேலே நீங்கள் படித்தது.


காந்தி கொல்லப்பட்டார். இந்தியாவின் ஆன்மா ஒரு மத வெறியனால் சுட்டுத் தள்ளப்பட்டது' என்ற தலைப்புடன் தொடங்கும் அந்த காந்தி கொலைச் செய்தி வெளியான செய்தித்தாளை பெரிதாக பிரேம் போட்டு தன் அலுவலகத்தில் கடைசிவரை மாட்டி வைத்திருந்த ஜேம்ஸ் மைக்கேல், தனது 86 வயதில் காந்தி ஜெயந்தி (அக்.2) நாளன்று இறந்தார்.

இதற்கு முன்பும் கூட, “ஹேராம் என்பதை காந்தி சொல்லவில்லை. பென் கிங்ஸ்லிதான் அப்படிச் சொல்லிவிட்டார்” என்று கோபால் கோட்சேவும் தொடர்ந்து தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. (கோபால் கோட்சே டைம் இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து )

யார் அந்த பென் கிங்ஸ்லி: 1982 ஆம் ஆண்டு காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தார் ரிச்சர்ட் அட்டன்பரோ. அதில் காந்தியாக வேடமேற்று நடித்தவர் தான் பென் கிங்ஸ்லி.



கோபால் கோட்சே: நாத்துராம் கோட்சேவின் சகோதரரும், காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளியும் ஆவார். 1967க்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த இவர் மீத வாழ்க்கையைப் புனேவில் கழித்தார்.


காந்தியை ஒரு இந்து என்று காட்டுவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு அவர் வாயில் ஹேராம் திணிக்கப்பட்டுள்ளது என்பதே கோபால் கோட்சே தரப்பின் தொடர் வாதமாக இருந்து வருகிறது.

அபிமானிகள் என்பதற்காகவும் சரி, எதிர் கொள்கை என்றாலும் சரி, உண்மை மறையலாமே தவிர ஒருபோதும் மாறப்போவதில்லை...

அடுத்த செய்தி