ஆப்நகரம்

மின்கசிவால் சிலிண்டர் வெடித்து படுகாயம்; புதுச்சேரியில் அதிர்ச்சி!

புதுச்சேரி: மின் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து, வீட்டில் இருந்த இருவரும் பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Samayam Tamil 28 Jan 2019, 6:00 pm
புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் முருகம்மாள்( வயது 60). இவருடைய மருமகன் தம்பி பிரகனேஷ்( வயது 33) ஆகிய இருவரும் வீட்டில் இருந்த போது, முருகம்மாள் வீட்டில் டிவியில் படம் ஓடிய நிலையில், அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டும், சிலிண்டர் வெடித்து பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டது.
Samayam Tamil Puducherry Fire Accident


இதில் ரூமில் தூங்கிக் கொண்டு இருந்த பிரகனேஷ் கையில் பலத்த காயத்துடனும், முருகம்மாள் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருவரையும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

அடுத்த செய்தி