ஆப்நகரம்

ஓடும் ரயிலில் தவறி விழுந்த பெண் : நொடிப்பொழுதில் காப்பாற்றிய பயணிகள்!!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை ,சக பயணிகள் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 3 Oct 2018, 12:15 pm
மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை ,சக பயணிகள்காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Girl-slips


மும்பைமின்சார ரயிலில் 20 வயது மதிக்கதக்க பெண் பயணித்தார். கூட்ட நெரிசல் காரணமாக மின்சார ரயிலின் நுழைவாயிலில் நின்று கொண்டு பயணித்தார். ரயில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும்போது, அதிலிருந்து தவறி விழந்த அந்தப் பெண்ணை சக பயணிகள் காப்பாற்றினர். அப்போது எதிர் திசையில் இருந்து மற்றொரு ரயில் வந்து கொண்டிருந்தது. அதிருஷ்டவசமாக அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார்.


இந்த சம்பவத்தைரயிலில் பயணித்த யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மின்சார ரயில்களில் பயணிக்கும்போது கவனத்துடன் பயணிப்பது குறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டபோதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி