ஆப்நகரம்

மருத்துவமனை வரிசையில் காத்திருந்த சிறுமி உயிரிழப்பு!

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனை வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் போது உயிரிழந்தார்.

TNN 25 Aug 2016, 1:26 pm
அம்பாலா : உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனை வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் போது உயிரிழந்தார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி தனது தாயுடன் குர்காவுனில் உள்ள அரசு பொது மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். சுமார் 45 நிமிடங்கள் அனுமதி சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது அந்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி ரமேஷ் தன்கர் தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் முடிந்த பிறகு நாடு திரும்பிய ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் செய்தியாளர்களிடம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Samayam Tamil girl waiting in hospital queue dies
மருத்துவமனை வரிசையில் காத்திருந்த சிறுமி உயிரிழப்பு!


சம்பவம் நடந்த தினம் உமேஷ் மேத்தா எனும் மருத்துவர் புற நோயாளிகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணிக்கப்பட்டதாகவும், அந்த மருத்துவரை தற்போது அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தலைமை மருத்துவர் தங்கர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அனிதா எனும் பெண்ணையும் பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். சிறுமியின் தாய் நேரடியாக அவசர பிரிவிற்கு கொண்டு செல்லாமல் வரிசையில் நின்று காலம் தாழ்த்தியுள்ளதாகவும் தலைமை மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி