ஆப்நகரம்

கறுப்பு பணம் குறித்து தகவல் தந்தால் ரூ.5 கோடி சன்மானம்!

கறுப்பு பணம் குறித்து தகவல் அளிப்போருக்கு, ஐந்து கோடி ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 11:54 am
கறுப்பு பணம் குறித்து தகவல் அளிப்போருக்கு, ஐந்து கோடி ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
Samayam Tamil black_money
கறுப்பு பணம் குறித்து தகவல் தந்தால் ரூ.5 கோடி சன்மானம்!


கறுப்பு பணத்தை ஒழிக்கவும், பண பதுக்கலில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களின் சொத்துகளை முடக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை பெறுவதற்கு வகை செய்யும் விதத்தில் புதிய பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை சன்மானம் வழங்கப்படும்' என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.


அதே போல், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்கள், வெளிநாடுகளில் வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகள் பற்றிய தகவல் அளிப்போருக்கு, ஐந்து கோடி ரூபாய் வரை சன்மானம் வழங்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.


மேலும் வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பான தகவல்களை தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை வெகுமதி அளிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பினாமி சொத்து குறித்து தகவல் தரலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி