ஆப்நகரம்

குஜராத் தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி அம்மாநில முதல்வருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கடிதன் எழுதியுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2020, 4:53 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணி நகரில் அம்மாநில அரசின் உதவியோடு கடந்த 1971ஆம் ஆண்டு தமிழ் மேல் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இதனிடையே, கொரோனா தொற்று, மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி அப்பள்ளியை மூடுவதற்கான நடவடிக்கையை அம்மாநில கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil அகமதாபாத் எம்.பி.யுடன் ஜி.கே.வாசன்
அகமதாபாத் எம்.பி.யுடன் ஜி.கே.வாசன்


அத்துடன், மாற்றுச்சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளுமாறும் அம்மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அறிவுறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால், அங்கு வசித்து வரும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பள்ளியை மூடக் கூடாது என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத், மற்றும் தமிழக அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜராத் அரசை தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழ் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தமிழ் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

10, 12வது வகுப்பில் முதலிடம் பிடித்தவர்களுக்கு கார் பரிசு; ஆச்சரியப்படுத்திய கல்வி அமைச்சர்!

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி அம்மாநில முதல்வருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கடிதன் எழுதியுள்ளார். மேலும், அகமதாபாத் எம்.பி. கிரிட் சோலன்கியை நேரில் சந்தித்து இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி