ஆப்நகரம்

சக்தி வாய்ந்த ராணுவங்களின் பட்டியல்; சர்வதேச அளவில் இந்தியாவின் இடம் இதுதான்!

உலக அளவில் சக்தி வாய்ந்த ராணுவங்களின் பட்டியலில் இந்திய ராணுவம் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.

Samayam Tamil 6 Mar 2018, 7:47 am
டெல்லி: உலக அளவில் சக்தி வாய்ந்த ராணுவங்களின் பட்டியலில் இந்திய ராணுவம் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.
Samayam Tamil global firepower ranks india military as fourth strongest
சக்தி வாய்ந்த ராணுவங்களின் பட்டியல்; சர்வதேச அளவில் இந்தியாவின் இடம் இதுதான்!


ஜி.எஃப்.பி எனப்படும் குளோபல் ஃபயர் பவர்(Global Firepower list 2017) என்ற பெயரில் சக்தி வாய்ந்த ராணுவங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இந்த பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் ரஷ்யாவும், 3வது இடத்தில் சீனாவும், 5வது இடத்தில் பிரான்சும் உள்ளன.

இவற்றைத் தொடர்ந்து பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சகோதரத்துவ நாடான பாகிஸ்தான் 13வது இடத்தில் உள்ளது. உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் வடகொரியா, 23வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Global Firepower ranks India military as fourth strongest.

அடுத்த செய்தி