ஆப்நகரம்

உலகமயமாக்கல் கொள்கையால் இந்தியாவை கொண்டாடும் மன்மோகன் சிங்!

உலகமயமாக்கல் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

TNN 23 Sep 2017, 6:17 pm
மொஹாலி: உலகமயமாக்கல் இந்தியாவில் தொடர்ந்து இருக்கும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil globalisation will be continued in india says manmohan
உலகமயமாக்கல் கொள்கையால் இந்தியாவை கொண்டாடும் மன்மோகன் சிங்!


உலகமயமாக்கலின் பிரம்மாண்ட முன்னோடியாக சீனா திகழ்கிறது.

இதேபோல் நம் நாட்டிலும் உலகமயமாக்கலை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதாரம் சிறப்பாக முன்னேற்றி வருகிறோம்.

இருப்பினும் பல்வேறு சவால்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. இந்தியாவில் மலிவான உழைப்பு கிடைப்பதால், ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் தேடி வருகின்றன.

விரைவில் உற்பத்தி இயந்தரமாக மாறும் அபாய சூழல் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறியதை சுட்டிக் காட்டினார்.

நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாக விளங்கும் வறுமை, அறியாமை, வேலையின்மையை தீர்க்க அவசர முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்தியா 25 ஆண்டுகளாக பொருளாதார கொள்கையில் நிலைத்து நிற்பது சிறப்புக்குரியது. இதனால் வறுமையின் கோரத்தை ஓரளவு சரிசெய்துள்ளதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Globalisation will be continued in India says ManMohan.

அடுத்த செய்தி