ஆப்நகரம்

Go Back Modi: பிரதமரின் ஆந்திர வருகைக்கு முன், தேசிய அளவில் டிரெண்டாக்கிய எதிர்ப்பாளர்கள்!

டுவிட்டரில் டாப் டிரெண்டிங்கில் ஹேஸ்டேக் Go Back Modi இன்று காலை முதல் முன்னிலையில் இருக்கிறது.

Samayam Tamil 10 Feb 2019, 11:33 am
தென்னிந்திய மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அங்கு ஏராளமான போஸ்டர்களும், பேனர்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Modi


அவற்றின் “Go Back Modi" என்ற வார்த்தை அதிகளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. டுவிட்டரில் இன்று காலை முதல் #GoBackModiAndhra என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.

ஆந்திராவில் வைக்கப்பட்டுள்ள ஒரு போஸ்டரில், பொதுமக்கள் கூட்டத்தைப் பார்த்து மோடி தப்பி ஓடுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் #NoMoreModi மற்றும் #ModiIsAMistake ஆகிய ஹேஸ்டேக்குகள் குறிப்பிடப் பட்டுள்ளன.

மேலும் ”மோடி திரும்பி வராதே” என்பதைக் குறிக்கும் வகையிலான 'Modi never again' என எழுதப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் கருப்பு உடை அணிந்து, பதாகைகள் உடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அதாவது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி