ஆப்நகரம்

'கோட்சே தேசபக்தர்' என்ற பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யா தாகூர்!!

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் மக்களவையில் இன்று மன்னிப்பு கோரினார்.

Samayam Tamil 29 Nov 2019, 1:39 pm
நாதுராம் கோட்சே குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியதுடன் அவையில் தன்னை தீவிரவாதி என்று அழைத்ததற்கும் கண்டனம் தெரிவித்தார்.
Samayam Tamil godse remark pragya thakur apologised for her speech in lok sabha
'கோட்சே தேசபக்தர்' என்ற பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யா தாகூர்!!


கடந்த புதன் கிழமை எஸ்பிஜி பாதுகாப்பு மசோதா குறித்து திமுக எம்.பி. அ. ராசாவுக்கு மக்களவையில் பேசுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. காந்தியைக் கொன்ற கோட்சே பற்றி ராசா பேசிக் கொண்டு இருக்கும்போது, குறுக்கிட்டு பேசிய எம்.பி. பிரக்யா தாகூர், ''நாதுராம் கோட்சே தேசபக்தர்'' என்றார்.

இதனால் அவையில் அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. இதற்கு முன்னதாக பிரக்யாவின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதையடுத்து ராணுவ பாதுகாப்புக் கவுன்சிலில் இருந்து பிரக்யா நீக்கப்பட்டார்.

இன்று மக்களவையில் பேசிய பிரக்யா, ''அவையில் நான் பேசிய பேச்சு திரித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்பை நான் மதிக்கிறேன். என்னுடைய பேச்சு மூலம் யாரவையாவது நான் புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

அதேசமயம் என்னை தீவிரவாதி என்று அழைப்பதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அழைப்பது என்னுடைய கண்ணியதை குறைப்பதாக உணருகிறேன். எனக்கு எதிரான இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை '' என்றார்.

'கோட்சே தேசபக்தர்' என்ற பிரக்யா தாகூரின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்!!

இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், ''டவுன் டவுன்'' என்று கூக்குரலிட்டனர். அவையில் இருந்து பிரக்யா வெளியேற வேண்டும் என்று குரல் எழுப்பினர்.

கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு: காங்கிரஸ் வெளிநடப்பு!

இதற்கிடையே பிரக்யாவை தீவிரவாதி என்று தனது ட்வீட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அன்று குறிப்பிட்டு இருந்தார். ராகுல் காந்தி தனது டிவீட்டில், ''கோட்சேவை தேசபக்தர் என்று தீவிரவாதி பிரக்யா அழைக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு வருத்தமான சம்பவம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த செய்தி