ஆப்நகரம்

பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதைப் போன்றது: மனோகர் பாரிக்கர்

''பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதைப் போன்றது'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

TOI Contributor 16 Aug 2016, 5:51 pm
''பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதைப் போன்றது'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Samayam Tamil going to pakistan is same as going to hell says manohar parrikar
பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதைப் போன்றது: மனோகர் பாரிக்கர்


அரியானா மாநிலம் ரெவாரி பகுதியில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், ''எப்போதும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. அதற்கான பிரதிபலனையும் அந்த நாடு அனுபவித்து வருகிறது. திங்கள் கிழமை நமது வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை ஓட ஓட விரட்டினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதற்கு சமம்.

எங்களை தாக்கினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். பதிலடி கொடுப்போம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதேபோல் பலோசிஸ்தான் மாகாணத்தில் மனித குலத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என எச்சரித்தார்.

சமீபத்தில் இஸ்லாமாபாத் சென்று இருந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் அவமரியாதை செய்தது. இந்நிலையில், வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் மாநாட்டில் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது இந்த பயணத்தை அருண் ஜெட்லி ரத்து செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங்கிற்கு நேர்ந்த அவமரியாதையை அடுத்து இந்த முடிவை அருண் ஜெட்லி எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே மனோகர் பாரிக்கரும் அவ்வாறு பேசியுள்ளார்.

அடுத்த செய்தி