ஆப்நகரம்

பிரபல இந்திய இசை கலைஞருக்கு டூடுள் வெளியிட்ட கூகுள்..!

பிரபல கஜல் இசைப்பாடகர் பேகம் அக்தரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுளை வெளியிட்டுள்ளது.

TNN 7 Oct 2017, 10:44 am
பிரபல கஜல் இசைப்பாடகர் பேகம் அக்தரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுளை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil google released doodle for begum akhthars 103 birthday
பிரபல இந்திய இசை கலைஞருக்கு டூடுள் வெளியிட்ட கூகுள்..!


யார் இந்த பேகம் அக்தர்..?

பேகம் அக்தர், 1914-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ல் உத்தர பிரதேச மாநிலம் பாசியாபாத்தில் பிறந்தார். இவர் தனது ஏழு வயதிலேயே புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர்களான அதா முகமது கான் (பாட்டியாலா கரனா), அப்துல் வாகித் கான் (கிரனா கரனா) ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றவர்.

தனிச்சிறப்பு..?

தும்ரி, தாத்ரா இசையை பாடுவதில் தனக்கென பெயரை பெற்றவர் பேகம் அக்தர். அதிலும், பூரப் மற்றும் பஞ்சாபி ஸ்டைல் இரண்டையும் கலந்து பாடுவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் பாடும் கஜல் இசை தனித்துவமானது. அரிதானது.

இவர் இந்திய அரசாங்கத்திடமிருந்து சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர். கசல்களின் இராணி என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டார்

இந்திய இசைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பேகம் அக்தருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை மத்திய அரசு வெளியிட்ட்து குறிப்பிடத்தக்கது.

Google released doodle for begum akhthar’s 103 birthday.

அடுத்த செய்தி