ஆப்நகரம்

Google:தேர்தல் விளம்பரம் வெளியிடுவது குறித்து கூகுள் என்னவெல்லாம் செய்யப்போகிறது தெரியுமா?

தேர்தல் விளம்பரங்கள் வெளியிடுவதில் முழு வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவோம் என கூகுள் நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2019, 10:32 pm
தேர்தல் விளம்பரங்கள் வெளியிடுவதில் முழு வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவோம் என கூகுள் நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
Samayam Tamil Google


இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் விளம்பரங்கள் வெளியிடுவதில் வெளிப்படை தன்மை கடைப்பிக்கப்படும்.

தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியிடும் போது, அந்த விளம்பரத்தில் உள்ள எல்லா விபரங்களும் விளம்பரதாரர் கொடுத்ததே என்ற தகவலை தெளிவாக தெரிவிப்போம்.

அதுமட்டுமல்லாமல் ஒரு விளம்பரம் வெளியிடுவதற்கு முன் தேர்தல் ஆணையத்தில் அதற்கான முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம். அப்படி பெறப்பட்ட விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படும்.

அரசு, விளம்பரங்களுக்கான அனுமதியை முன்கூட்டியே கொடுக்க ஏற்பாடு செய்ய விளம்பர கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அதோடு, விளம்பரம் அளிப்பவரின் முழு பின்னனியை விசாரித்த பின்னரே அதை பெறுவோம். விளம்பரம் தருவோரின் விபரம் சரிபார்ப்பு பிப்ரவரி 14ம் தேதி முதல் தொடங்கும்.” என தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி