ஆப்நகரம்

கோரக்பூாில் மேலும் 34 குழந்தைகள் பலி !

உத்தரபிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூாில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 63 குழந்தைகள் உயிாிழந்தனா். இதனைத்தொடர்ந்து கோரக்பூரில் மேலும் 34 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 17 Aug 2017, 1:44 pm
உத்தரபிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூாில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 63 குழந்தைகள் உயிாிழந்தனா். இதனைத்தொடர்ந்து கோரக்பூரில் மேலும் 34 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil gorakhpur again 34 childern death in government hospital
கோரக்பூாில் மேலும் 34 குழந்தைகள் பலி !


உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆக்ஸிஜன் இல்லாததால் சுமார் 63 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் அளித்த நிறுவனம்தான் இதற்கு காரணம் என்று குற்றம் சட்டப்பட்டது. ஆனால் இதற்கு தாங்கள் காரணம் இல்லை என்று ஆக்ஸிஜன் அளித்த நிறுவன் கூறிவிட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து உாிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வழக்கறிஞா் ஒருவா் மனுதாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோாிக்கைக்கு மறுப்பு தொிவித்து விட்டது. மேலும் அலகாபாத் நீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பில் வழக்கு தொடா்ந்து உாிய வாதத்தினை முன்வைக்க அறிவுருத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையிலிருந்து புதன் கிழமை வரையிலான இந்த இறப்புகள் நிகழ்ந்ததாக கோரக்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். மூளை வீக்க நோய் காரணமாக குழந்தைகள் இறப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் இறந்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் மேலும் 34 குழந்தைகள் இறந்துள்ள தகவல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Gorakhpur again 34 childern death in government hospital

அடுத்த செய்தி