ஆப்நகரம்

ஆதார் இல்லாத 53,000 பேர்க்கு ஓய்வூதியம்: மத்திய அரசு

ஆதார் இல்லாத ஓய்வூதியதராரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Samayam Tamil 4 Jan 2018, 7:58 pm
ஆதார் இல்லாத ஓய்வூதியதராரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil government approves pension of 53000 in uttarakhand without aadhaar
ஆதார் இல்லாத 53,000 பேர்க்கு ஓய்வூதியம்: மத்திய அரசு


உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான அரசு நடைபெறுகிறது. அங்கு ஓய்வூதியதாரர்கள் பேருக்கு ஆதார் எண் இணைக்காத காரணத்திற்காக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. மேலும், ஆதார் இணைக்காத மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவைகள் ஆகியோருக்கும் உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

மொத்தம் 59 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், 4.2 லட்சம் முதியோர் மற்றும் 1.5 லட்சம் விதவைகள் ஆகியோர் உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களில் 53 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு ஆதார் இல்லாத ஓய்வூதியதராரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி