ஆப்நகரம்

பாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா?

பாஸ்போர்ட்டில் சில அதிரடி மாற்றங்களை இந்திய வெளியுறவுத்துறை கொண்டு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Jan 2018, 6:18 am
பாஸ்போர்ட்டில் சில அதிரடி மாற்றங்களை இந்திய வெளியுறவுத்துறை கொண்டு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil government may remove address details from passport and change colour to orange
பாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம்: ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றமா?


பாஸ்போர்ட்டில் குடிமக்களின் விவரங்கள் அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமலும், பாஸ்போர்ட்டின் நிறத்தினை ஆரஞ்சி நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை பரிசீலனை செய்து வருவதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் பத்திரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சோதனையின் போது பார்கோடை ஸ்கேன் செய்தால், எளிதாக குடிமக்களின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாக குடிமக்களின் விவரங்களை பாதுகப்பாக கையாளும் முயற்சியின் நடவடிக்கையாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் குடிமக்களின் விவரங்கள் அடங்கிய இறுதிபக்கத்தை நீக்கலாம் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டில் குடிமக்களின் முகவரி அடங்கிய இறுதிப்பக்கத்தை நீக்கிவிட்டு, அதனை வெற்றிடமாக விட்டுவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிமக்களின் விவரங்களை பத்திரமாக பாதுகாக்கத்தான் இந்நகர்வு என்று வெளியுறவுத்துறை பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் கூறியுள்ளார் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப்பணி அதிகாரிகள் மற்றும் அரசுப்பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அதிகாரிகள் ஆகியோருக்கு வெள்ளை நிறத்திலும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்திலும், பிற குடிமக்களுக்கு நீல நிறத்திலும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இதனை ஆரஞ்சு நிறமாக மாற்றவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்தில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The Ministry of External Affairs is considering a proposal to issue new passports without the last page that contains the residential address of the passport holder.

அடுத்த செய்தி