ஆப்நகரம்

ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி அவமானப்படுத்தினார்: மம்தா பானர்ஜி

மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை மிரட்டி அவமானப்படுத்தினார் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 4 Jul 2017, 10:23 pm
கல்கட்டா: மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை மிரட்டி அவமானப்படுத்தினார் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil governor tripathi has threatened insulted me mamata banerjee
ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி அவமானப்படுத்தினார்: மம்தா பானர்ஜி


மேற்குவங்கத்தில் உள்ள பர்கானாஸ் மாவட்ட பதுரியாவில் மத மோதல்கள் நடைப்பெற்றது. இதுகுறித்து அம்மாநில ஆளுநர் திரிபாதியை பாஜக கட்சியைச் சேர்ந்தவர் சந்தித்து விவரித்தனர். இதன் பின்னர் ஆளுனர் திரிபாதி அம்மாநில முதல்வர் மம்தாவை தொலைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மேற்குவங்க ஆளுநர் திரிபாதி தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா கூறும்போது," ஆளுநர் திரிபாதி தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். பாஜகவுக்கு சாதகமாக அவர் பேசினார்.இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது . அளுநரான நீங்கள் இப்படி பேச கூடாது என்று நான் அவரிடன் தெரிவித்தேன்.

ஆனால் ஆளுநர் பாஜகவின் மாவட்ட தலைவர் போல நடந்து கொண்டார். சட்டம் ஒழுங்கு குறித்து பெரிதாக பேசினார். அவர் சட்டத்தினால் ஆளுநர் பதவிக்கு வந்தவர் . நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். அவர் தனது பதவியின் மாண்பை புரிந்து நடக்க வேண்டும்." என்று கூறினார்.

அடுத்த செய்தி