ஆப்நகரம்

ஸ்டேட் டூ சென்ட்ரல்; பிரிட்ஜ் போடுங்க ஆளுநர் பாய்ஸ்: தலையில் தட்டும் ராம்நாத் கோவிந்த்!

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

TNN 12 Oct 2017, 11:18 pm
டெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil governors are the bridge between state and central
ஸ்டேட் டூ சென்ட்ரல்; பிரிட்ஜ் போடுங்க ஆளுநர் பாய்ஸ்: தலையில் தட்டும் ராம்நாத் கோவிந்த்!


தலைநகர் டெல்லியில் 48வது ஆளுநர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்று நடத்தி வருகிறார். 27 மாநில ஆளுநர்கள், 3 துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் 2022ம் ஆண்டில் இந்தியா எட்ட வேண்டிய சாதனை இலக்குகள் குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. மாநாட்டில் பேசிய ராம்நாத் கோவிந்த், ஆளுநர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்கள் பிரச்சனைகளை ஆட்சியாளர்களுடன் கலந்து பேசி, மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார். இளைஞர்கள் சக்தியால் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சியாகும். அதில் ஆளுநர்களுக்கு முக்கிய பங்குள்ளது. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Governors are the bridge between State and Central says President Ramnath Kovind.

அடுத்த செய்தி