ஆப்நகரம்

இன்று அரசு விடுமுறை; மாநில அரசு முக்கிய அறிவிப்பு!

தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 10:56 am
வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் புயல்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகக் கடலோரப் பகுதிகளை கடந்த புரேவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் இந்திரா காந்தி சிலை, பாவாணர் நகர், நடேசன் நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், சுதந்திர பொன்விழா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பலரது வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
Samayam Tamil Puducherry Holiday


எனவே பாதுகாப்பான முறைகளில் மீன்பிடித் துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருவதால் கடந்த 4ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பெனோ உத்தரவிட்டிருந்தார்.

இந்த சூழலில் இன்றும் (டிசம்பர் 5) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டும் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பா? உயர்கல்வித்துறை எச்சரிக்கை!

மேலும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இன்றைய தினம் ஓய்வாக இருக்கும். இதையடுத்து வரும் திங்கள் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஆறு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி