ஆப்நகரம்

18 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு

டெல்லி: 18 பூச்சி கொல்லி மருந்துகளை தடை விதிக்கப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2018, 3:50 am
டெல்லி: 18 பூச்சி கொல்லி மருந்துகளை தடை விதிக்கப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil 65408143


இந்தியாவில் பயன்படுத்தப்படும் 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் தடையோ கட்டுப்பாடோ இல்லை. இதனால், இந்த 66 பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கடந்த 2013ல் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

இந்தக் குழு குழு அவற்றில் 18 மருந்துகளை தடை செய்ய 2 ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரை செய்தது. இதன்படி, 12 பூச்சி கொல்லி மருந்துகள் (பெனோமில், கார்பரில், டியாஜினோன், பெனாரிமோல், பென்தியோன், லினுரோன், மெதோக்சி, எதில் மெர்குரி குளோரைடு, மெதில் பராதியோன், சோடியம் சியானிட், தியோமெடோன், திரிமோர்ப்) ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்தும் மற்ற 6 பூச்சி கொல்லி மருந்துகள் (அலக்ளோர், திகுளோர்வோஸ்,போரேட், பாஸ்பாமிதோன், திரியஜோபோஸ், ட்ரைக்ளோர்போன்) 2020 டிசம்பரிலிருந்தும் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த மருந்துகளை இறக்குமதி செய்பவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி