ஆப்நகரம்

ஆடுகளை விற்று கழிவறை கட்டிய மனிதர்

உத்தரப் பிரதேசத்தில் ஒருவல் தனது ஆடுகளை விற்று, கழிவறையை கட்டியுள்ளார்.

Samayam Tamil 25 Apr 2018, 1:22 pm
உத்தரப் பிரதேசத்தில் ஒருவல் தனது ஆடுகளை விற்று, கழிவறையை கட்டியுள்ளார்.
Samayam Tamil DbiSoEVV0AUiz2m


உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள நவேடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜபார் ஷா. 55 வயதான இவர் ஆடுகள், ஆட்டுத் தோல்கள் ஆகியவற்றை விற்று, குடும்பம் நடத்தி வருகிறார். ஜபார் ஷாவின் வீட்டில் அவரது மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் ஆகியோர் வசிக்கின்றனர்.

அவரது வீட்டில் கழிவறை இல்லாததால், இயற்கை உபாதைகளுக்காக மறைவான வெளியிடங்களுக்குப் போகும் நிலை இருந்தது. இந்நிலையில், ஜபார் ஷா கழிப்பறை கட்ட முடிவு செய்தார். கழிப்பறை கட்ட பணம் இல்லாத போதும் தனது ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியுள்ளார்.

வாழ்வாதாரமாக இருந்த 7 ஆடுகளையும் ரூ.15,000 க்கு விற்று தனது வீட்டில் அண்மையில் கழிப்பறை கட்டியுள்ள அவர், பணத்திற்காக கிராம சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் உதவி கேட்ட போது யாரும் உதவ முன்வரவில்லை.
இவரைப் பற்றி செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதால், சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் அவருக்கு 7 ஆடுகளை பரிசாக வழங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச அரசும் கழிப்பறை கட்ட அவர் செலவிட்ட ரூ.12,000 பணத்தை ஜபார் ஷாவுக்கு வழங்கி இருக்கிறது.

அடுத்த செய்தி