ஆப்நகரம்

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை!

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

Samayam Tamil 29 Jan 2018, 1:41 pm
டெல்லி: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
Samayam Tamil govt is committed to double the income of farmers by the year 2022 says ram nath kovind
2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை!


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இதில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிப்ரவரி ஒன்றில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் சிறப்பம்சங்கள் எடுத்துரைத்தார்.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும். வரும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு உறுதி கொண்டுள்ளது.

பிராட்பேண்ட் இணைப்பு மூலம் கிராமங்களை ஒன்றிணைக்கும் பணி தொடங்கிவிட்டது.

இதுவரை 2.5 லட்சம் பஞ்சாயத்துக்கள் பிராட்பேண்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 2.70 லட்சம் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசின் பொது சேவை மையங்கள் மூலம் குறைந்த விலையில் மக்கள் டிஜிட்டல் சேவைகளைப் பெற முடியும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

Govt is committed to double the income of farmers by the year 2022 says Ram Nath Kovind.

அடுத்த செய்தி