ஆப்நகரம்

அருணாச்சலில் வெளிநாட்டினர் சுற்றுலாவுக்கு அனுமதி

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 26 Mar 2018, 4:44 pm
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil 63457441


மத்திய அரசு நாட்டின் எல்லைப்புறங்களில் உள்ள மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளைப் பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிக்கிம், லடாக், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்த அனுமதி குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் செல்வதற்கான கட்டுப்பாடு கொண்ட அனுமதியாக இருக்கும். இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சரக அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உள்நாட்டு எல்லைப் புறங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு 5 ஆண்டுகள் வரை அனுமதி பெற முடியும். தற்போது இந்த அனுமதி அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை மட்டும் அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, அருணாச்சலின் தவாங் பள்ளத்தாக்கு, ஜிரோ, மோம்டிலா ஆகிய அழகிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் வருவாயைப் பெருக்க சுற்றுலாத்துறை ஆலோசிக்கிறது. இதுகுறித்து சுற்றலா அமைச்சகம் எல்லைப்புற மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. விரைவில் அப்பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

இதற்கான அனுமதி வழங்க வலியுறுத்தி சுற்றுலாத்துறை சார்பில் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டதாக அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்புடைய அருணாச்சலில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சுற்றுலாவை ஊக்குவிக்க இருக்கப்பதாக சுற்றுலாத்துறை செயலாளர் ரேஷ்மி வர்மா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி