ஆப்நகரம்

அவரு தூங்கலையா? செத்துட்டாரா? - கொரோனா பயிற்சி முகாமில் காத்திருந்த அதிர்ச்சி!

கோவிட்-19 பயிற்சி முகாமில் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த அரசு ஊழியர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 May 2020, 10:14 am
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சி.ஆர்.டி எனப்படும் கோவிட்-19 நகர செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ருதர்பூர் பொதுப்பணித்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வந்த ஜஸ்வந்த் சிங்(47) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்கள் கிச்சா நகரில் கண்காணிப்பு ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை எவ்வாறு ஆவணப்படுத்துவது என்று பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil அரசு அதிகாரி உயிரிழப்பு


பயிற்சி வகுப்பின் தொடக்கத்தில் சிங் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அதற்கடுத்த சில நிமிடங்களில் கண்களை மூடி உறங்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது குழுவினரும் அசதியால் தூங்குகிறார் என்று நினைத்து விட்டனர். பயிற்சி வகுப்பு நிறைவடைந்த பிறகும் உறங்கிய நிலையிலேயே சிங் இருந்துள்ளார்.

மில்லியனில் 10,000 பேர்; டெஸ்டிங்கில் ஆச்சரியம் - நாட்டின் நம்பர் ஒன் மாநிலம் இதுதான்!

இதையடுத்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் அப்படியே சரிந்துள்ளார். உடனே தண்ணீரை கொண்டு வந்து அவரது முகத்தில் தெளித்துள்ளனர். அப்போதும் அவர் எழவில்லை. உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜஸ்வந்த் சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கிச்சா நகரின் டேட்டா ஆபரேட்டர் பிரவீன் சிங் கூறுகையில், எங்களது பயிற்சியில் சிங்கும் கலந்து கொண்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சரியில்லை. தூக்க நிலையில் இருப்பதைப் போன்று காணப்பட்டார்.

ஏனெனில் முந்தைய நாள் இரவு நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் அதிகப்படியான வேலை இருந்துள்ளது. இதனால் பயிற்சி முகாமை தொடர்ந்து கவனிக்குமாறு அவரது குழுவின் மூத்த அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறார். அவர் அசதியில் உறங்குகிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு வகுப்பை கவனிக்க தொடங்கினோம்.

லைட்டா குறைஞ்ச கோவிட்-19; மூன்று நாட்களில் இப்படியொரு ஹேப்பி நியூஸ்!

இப்படியொரு சோகமான முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய உமேஷ் மாலிக், ஜஸ்வந்த் சிங்கின் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அதைப் பெற்ற பிறகே உயிரிழந்ததற்கான உண்மையாக காரணம் தெரியவரும் என்றார்.

அடுத்த செய்தி