ஆப்நகரம்

அரசுப் பள்ளிகள் சரியில்லயா? தனியார் வசம் ஒப்படைங்க; நிதி ஆயோக்கின் அதிரவைக்கும் பரிந்துரை...!

அரசுப் பள்ளிகள் ஒழுங்காக செயல்படவில்லை என்றால், அவற்றை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

TNN 30 Aug 2017, 3:06 am
டெல்லி: அரசுப் பள்ளிகள் ஒழுங்காக செயல்படவில்லை என்றால், அவற்றை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
Samayam Tamil govt schools can be handed over to private
அரசுப் பள்ளிகள் சரியில்லயா? தனியார் வசம் ஒப்படைங்க; நிதி ஆயோக்கின் அதிரவைக்கும் பரிந்துரை...!


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தாலோ அல்லது சரியாக செயல்படவில்லை என்றாலோ, அவற்றை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதி ஆயோக்கின் மூன்றாண்டு செயல்திட்டம் ஒன்று அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

2010 - 2014 காலகட்டம்:

* புதிதாக திறக்கப்பட்ட பள்ளிகள் - 13,500

* அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - 1.3 கோடி

* தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - 1.85 கோடி

2014 - 2015 காலகட்டம்:

* 3.7 லட்சம் அரசுப் பள்ளிகள் - 50க்கும் குறைவான மாணவர்கள் / சராசரி

* மொத்த அரசுப் பள்ளிகளில் சதவீதம்: 36

அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய காரணங்களாக கூறப்படுபவை:

* ஆசியர்கள் வருகைப் பதிவு குறைவு, பயிற்றுவித்தலில் குறைவான நேரமே செலவிடுவது, தரமில்லாத கற்றல் முறைகள்

எனவே மாநிலங்கள் உதவியுடன் குழு ஒன்றை உருவாக்கி, அரசுப் பள்ளி சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hollowed Government Schools Should Be Handed Over To Private Players, Suggests Niti Aayog.

அடுத்த செய்தி