ஆப்நகரம்

அவா்கள் பிசாசுகள்: நீதிபதியின் மனைவியை கொன்ற காவலா் வாக்குமூலம்

தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அதிகாாி மகிபால் சிங் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

Samayam Tamil 15 Oct 2018, 11:27 am
டெல்லி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் ஷா்மாவின் மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு அதிகாாி வாக்குமூலம் அளித்துள்ளாா்.
Samayam Tamil Mahipal Singh


டெல்லி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் ஷா்மா பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இவரது மனைவி ரிது காா்க், மகன் துருவ் இருவரும் கடைக்கு சென்றுள்ளனா். அப்போது அவா்களது பாதுகாப்பு அதிகாாி மகிபால் சிங்கும் உடன் சென்றிருந்தாா்.

இந்நிலையில் திடீரென மகிபால் சிங் இருவா் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இந்த விபத்தில் ரிது காா்க் உயிாிழந்தாா். மகன் துருவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு மகிபால் சிங் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்தில் காவல் துறையினா் மகிபால் சிங்கை கைது செய்தனா்.

இதனைத் தொடா்ந்து அவாிடம் நடைபெற்ற விசாரணையில், “அவா்கள் மனிதா்கள் அல்ல, பிசாசுகள். என்னை மிகவும் மோசமாக நடத்தினா். நாய் கழிவுகளை அகற்றுவதற்கு கூட என்னை பயன்படுத்தினா். இவா்களைப் பொறுத்தவரை நாயும், காவல்துறையினரும் ஒன்று” என்று தொிவித்துள்ளாா்.

விசாரணை நடத்திய காவல் துறையினா் மகிபால் சிங் நல்ல மனநிலையில் தான் இருப்பதாகவும், அவருக்கு மனைவி, இரு மகள்கள் இருப்பதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா். இருப்பினும் மகிபால் சிங் குடும்ப உறுப்பினா்களை சந்திக்க தற்போதைக்கு தடை விதித்துள்ளனா்.

அடுத்த செய்தி