ஆப்நகரம்

கொரோனா: வெளிநாட்டில் இறப்பவர்களின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரக்கூடாது

கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட அல்லது நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் உயிரிழந்தால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது பரிந்துரைக்கப்பட்டது அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது

Samayam Tamil 21 Apr 2020, 9:19 pm
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது பரிந்துரைக்கப்பட்டது அல்ல என மத்திய சுகாதாரத்துரை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி

* கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட அல்லது நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் உயிரிழந்தால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது பரிந்துரைக்கப்பட்டது அல்ல

* மேற்கூறிய பரிந்துரைக்கு மாறாக, COVID -19 சந்தேகத்திற்கிடமான / உறுதிப்படுத்தப்பட்ட சடலங்கள் இந்திய விமான நிலையங்களுக்கு வந்தால், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சம்பந்தப்பட்ட விமான நிலைய சுகாதார அலுவலர்களுக்கு விரிவாக வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் அதனை கையாள வேண்டும்.

* சந்தேகத்திற்கிடமான / உறுதிப்படுத்தப்பட்டகோவிட்19 மரணங்களை குறிப்பிடும் இறப்பு சான்றிதழ்கள், சடலங்களை எடுத்து வருவதற்கு தூதரகம் வழங்கிய தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.

23 மாநிலங்கள்... 86 மாவட்டங்களில் மட்டும் இது எப்படி சாத்தியமானது?!

* சடலங்களை கொண்டு வரும் விமான நிறுவனங்கள் சவப்பெட்டிகள் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.

* ஏதேனும் சேதமடைந்திருந்தால் அதனை கையாள்பவர்கள் பாதுகாப்பு உடைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டுகளில் சவப்பெட்டையை சுற்றி வைக்க வேண்டும். இறுதிச்சடங்கை நடத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சடலத்தை ஒப்படைக்கும் வரை அதனுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.

* சடலத்தை ஒப்படைத்த பின்னர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதுகாப்பு உடைகளை அகற்ற வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்பின்னர் சடலத்தை கையாண்டவர்கள் 28 நாட்களுக்கு கண்காணிக்கப்பட வேண்டும். சடலத்தை ஏற்றி வந்த விமானம் உள்ளிட்ட வாகனங்கள் முறையாக கிருமி நாசம் செய்யப்பட வேண்டும். இதனை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.

கேரள: 19 முறை கொரோனா பாசிட்டிவ், ஆனால் அறிகுறிகள் இல்லை!

* சடலத்தை எரித்த பின்னர் வரும் சாம்பல்களில் பாதிப்பு இல்லை என்பதால் அதனை இந்திய விமானம் (பொது சுகாதாரம்) விதிகளின் 1954இன் கீழ் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

* சந்தேகத்திற்கிடமான / உறுதிப்படுத்தப்பட்டகோவிட்19 மரணங்கள் விமானத்திலேயே நிகழ்ந்தால் அதனை விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் விமானிகள் முறையாக தெரிவிக்க வேண்டும்.

* விமானத்தில் இருக்கும் ஊழியர்கள் அந்த சடலத்தை மூடி வைப்பதுடன், அருகில் இருக்கும் பயணிகளை வேறு இருக்கைகளுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை விமானம் தரையிரங்க வேண்டிய விமான நிலையத்துக்கு செல்ல 8 மணி நேரத்துக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் அனுமதி கோர வேண்டும்.

* இந்திய வான் எல்லைக்குட்பட்டு இந்திய விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டால், உயிரிழந்தவருக்கு அதன்முன்பு ஏற்பட்ட அறிகுறிகள் உள்ளிட்ட விவரங்களை விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் விமானிகள் முறையாக தெரிவிக்க வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

வழிகாட்டு நெறிமுறைகள்


* விமானத்தில் இருந்து இறந்தவரின் சடலம் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அனைத்து பயணிகளும் இறங்கியிருக்க வேண்டும். விமான நிலையத்தில் இருக்கும் பயிற்சி பெற்றவர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சடலத்தை விமானத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

* உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விமானத்தில் உடன் வரவில்லை என்றால் அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை உயிரிழந்தவரின் உறவினர்கள் வருவதற்கு தாமதமாகும் பட்சத்தில், சடலத்தை பிரத்யேகமான கோவிட்19 மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிணவறையில் வைத்து விட வேண்டும். அங்கு முறையாக கிருமி நாசம் செய்யப்பட வேண்டும். அங்கிருந்து பிரத்யேக வாகனத்தில் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட வேண்டும்.

* கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நபர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிரேதப்பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்பட்டது அல்ல. ஒருவேளை கொரோனா இல்லை என்றால் சட்டத்தின்படி நடைமுறையில் இருக்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

அடுத்த செய்தி