ஆப்நகரம்

குஜராத்; ஓட்டு எண்ணிக்கை மிஷினுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்!

குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், 1251 சிசிடிவி காமிராக்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் என்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

TNN 18 Dec 2017, 8:42 am
குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், 1251 சிசிடிவி காமிராக்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் என்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil gujarat assembly election 2017 results highlights in tamil
குஜராத்; ஓட்டு எண்ணிக்கை மிஷினுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார்!


182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் கடந்த 9 மற்றும் 14ம் தேதி என்று இரு கட்டங்களாக நடந்தன. இதே போல், 68 தொகுதி கொண்ட ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 9 ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தேர்தலை முன்னிட்ட நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளும், இரு கட்சிகளுக்கம் வலுசேர்ப்பதாகவே அமைந்ததால், பெரும்பாண்மை வெற்றி அமையுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா ஒய்வு பெறுவதாக தேர்தலுக்கு முன்பே தகவல் பரவியதால், காங்கிரசின் பலம் முன்பு போல் உள்ளதாக என்ற கேள்விக்கான விடையும் தேர்தல் முடிவில் தான் உள்ளன.

இந்நிலையில், இரு மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். .

அடுத்த செய்தி