ஆப்நகரம்

அம்பேத்கரை பிராமணர் என அழைப்பதில் தவறில்லை: பாஜக தலைவர்!!

அம்பேத்கரை பிரமணர் என்று அழைப்பதில் தவறு இல்லை என்று குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் ஆர். திரிவேதி கூறியுள்ளார்.

Samayam Tamil 30 Apr 2018, 4:51 pm
அம்பேத்கரை பிரமணர் என்று அழைப்பதில் தவறு இல்லை என்று குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் ஆர். திரிவேதி கூறியுள்ளார்.
Samayam Tamil 652273-trivedirajendra-021718


குஜராத்தில் நடைபெற்ற பிராமணர் வர்த்தக மாநாட்டில் ,குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் ஆர். திரிவேதி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில் ’’நன்கு கற்றறிந்தவர்களை பிராமணர் என அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வகையில் பி.ஆர். அம்பேத்கரை பிராமணர் என்று அழைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த கூற்றுப்படி பிரதமர் மோடியையும் பிராமணர் என்று அழைக்கலாம்’’ என்றார்.


இதற்கு பதில் அளித்து இருக்கும் அரசியல் தலைவர்கள், ‘’வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடிய மாபெரும் தலைவர் அம்பேத்கர். அவர் பார்ப்பனர்களின் வர்ணாசிரமதர்மத்தை முற்றிலுமாக எதிர்த்தவர். சூத்திரர்கள் என்று குறிப்பிட்ட மக்களை சாதி வாரியாக பிரித்தது இழிவுபடுத்தும் வகையில் பார்ப்பபனியம் இயங்கியது என்று நம்பியவர் அம்பேத்கர் . அப்படிபட்ட ஒரு தலைவரை பிராமணர் என்று கூறுவது ஏற்க முடியாத செயல்’’ என்று தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி வரும் நிலையில், குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் ஆர்.திரிவேதியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி