ஆப்நகரம்

தாமரையாக மாறிய ட்ராகன் பழம்; பாஜக அரசின் சேட்டையை பாருங்க!

ட்ராகன் பழத்திற்கு கமலம் என்ற பெயரில் காப்புரிமை பெற பாஜக அரசு விண்ணப்பம் செய்துள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 3:09 pm
குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் கட்ச், நர்மதா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருவகையான ட்ராகன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் ஒருபகுதியாக ட்ராகன் பழங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இது வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படும். இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
Samayam Tamil Dragon Fruit


எனவே இதனை உணவாக எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ராகன் பழத்தின் பெயர் சீனாவை நினைவுப்படுத்துவதால் வெறுப்பு தான் வருகிறது. எனவே ’கமலம்’ எனப் பெயர் மாற்றி காப்புரிமை பெற விண்ணப்பம் செய்துள்ளதாக குஜராத் மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) மாநில வனத்துறை அமைச்சகம் விண்ணப்பம் செய்துள்ளது.

திருப்பதி கோயிலுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்!

கமலம் என்றால் ’தாமரை’ என்று அர்த்தம். இது பாரதிய ஜனதா கட்சியின் சின்னம். மேலும் குஜராத் மாநில பாஜக தலைமையகத்திற்கும் ’ஸ்ரீகமலம்’ என்ற பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நமது மாநிலத்தில் விளையும் ட்ராகன் பழத்திற்கு கமலம் என்று பெயர் வைத்துள்ளோம். இதற்கான காப்புரிமையை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இதில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை. பெரும்பாலான விவசாயிகள் ட்ராகன் பழமானது தாமரை போன்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தான் அரசு இப்படியொரு நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார்.

'ட்ரிப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்தப் பழத்தின் மருத்துவ குணங்களை அறிந்து கட்ச் பகுதி விவசாயிகள் கமலம் என்ற பெயரில் தான் உள்ளூர் மார்க்கெட்களில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கட்ச் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் 150 விவசாயிகள் ட்ராகன் பழத்தை உற்பத்தி செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி