ஆப்நகரம்

‘புளூவேல்‘ கேமை தடை செய்யும் குஜராத் அரசு!

புளூவேல் கேமை விளையாட தடை செய்ய குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

TOI Contributor 5 Sep 2017, 11:39 pm
காந்திநகர்: புளூவேல் கேமை விளையாட தடை செய்ய குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil gujarat government to ban blue whale challenge game
‘புளூவேல்‘ கேமை தடை செய்யும் குஜராத் அரசு!


இந்தியாவில் ‘புளூவேல்‘ கேமை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த விபரீதமான விளையாட்டுக்கு ஏராளமான மாணவ–மாணவிகள் பலியாகிவருகின்றனர்.
இதை தடுக்கும் விதமாக மத்திய அரசு ‘புளூவேல்‘ கேமிற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் புளூவேல் விளையாட்டுக்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி கூறுகையில்,’
‘புளூவேல்‘ விளையாட்டை தடை செய்ய வழிகளை கண்டுபிடித்து உள்துறைக்கும், பிரதமர் செயலாளருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தற்கொலை செய்வதை நிறுத்த முடியும். குஜராத்தில் இந்த விளையாட்டு விளையாட தடை செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
என்றார்.

Gujarat government to ban Blue Whale Challenge game

அடுத்த செய்தி