ஆப்நகரம்

குஜராத்தை சூறையாட காத்திருக்கும் அதி தீவிரப் புயல்!

குஜராத்தில் அதி தீவிர புயலால் கனமழையோடு கடும் பாதிப்புகளும் ஏறப்படப் போகிறது.

Samayam Tamil 17 May 2021, 7:11 am
அரபிக்கடலில் அதி தீவிரப் புயலாக உருமாறியுள்ள டவ் தே புயல் குஜராத் மாநிலத்தில் நாளை (மே 18) கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil cyclone


புயல் கரையைக் கடக்கும் போது 165 முதல் 185 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பனாஜிக்கு வடமேற்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும் மும்பைக்கு தெற்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
உருமாற்றம் அடைந்த கொரோனாவை கோவாக்சின் தடுக்கும்: ஆய்வுக் கட்டுரை!
அடுத்த 24 மணி நேரத்தில் குஜராத் கடல் பகுதிக்கு நகர்ந்து செல்லும் டவ் தே புயல் நாளை அதிகாலை குஜராத்தின் போர்பந்தருக்கும், மஹூவாவுக்கும் நடுவே அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது 185 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்றும் கேரளா, கோவா, குஜராத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா இறப்புகளுக்கு 5ஜி காரணமா? கதறும் நிறுவனங்கள்!
குஜராத்தில் போர்பந்தர், பாவ்நகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி