ஆப்நகரம்

ஆசிரமத்திற்கு ஆப்பு வைத்த மாவட்ட நிர்வாகம்; எஸ்கேப் மோடில் ஜாலியாய் இருக்கும் நித்யானந்தா!

ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூடி மாவட்ட நிர்வாகம் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 1:22 pm
கடந்த சில நாட்களாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இவரது ஆசிரமத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil Nithyananda


இந்த சூழலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஹீராபூரில் நித்யானந்தா ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதற்கான நிலம் தனியார் பள்ளிக்கு சொந்தமானது என குற்றச்சாட்டு எழுந்தது.

எப்போதும் இந்துத்துவத்தை கைவிடமாட்டேன்: உத்தவ் தாக்கரே உறுதி

இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் போலீசாரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் அளிக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புனே: கால்வாயில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர் பலி!

இதையடுத்து அங்கிருக்கும் சீடர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தனது மகள்களை நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

பள்ளிப் பாடத்தில் பகவத் கீதை ஸ்லோகங்கள் இடம்பெறும்: ஹரியானா முதல்வர்

மேலும் பாலியல் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி