ஆப்நகரம்

ப்ளூடூத் ஓட்டு சர்ச்சை: தேர்தல் ஆணையத்தின் கண்டுபிடிப்பு

ப்ளூடூத் ஓட்டு சர்ச்சை: தேர்தல் ஆணையத்தின் கண்டுபிடிப்பு

TNN 10 Dec 2017, 3:35 pm
குஜராத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ப்ளூடூத் மூலம் கள்ளநோட்டு போடப்படுவதாக வந்த புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
Samayam Tamil gujarat phase 1 ec rubbishes reports of evm tampering via bluetooth
ப்ளூடூத் ஓட்டு சர்ச்சை: தேர்தல் ஆணையத்தின் கண்டுபிடிப்பு


குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையான போட்டியில் உள்ளன. படேல் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்றுள்ள காங்கிரஸ் பாஜகவுக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் 19 மாவட்டங்களில் 89 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. போர்பந்தரில் உள்ள தாக்கர் பிளாட் வாக்குச்சாவடியில் ப்ளூடூத் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தது.

காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா அளித்த இந்த புகாரின் பெயரில் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக அந்த வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்தனர். இதில் ப்ளூடூத் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளப்படவில்லை என்றும் பூத் ஏஜெண்ட் ஒருவரின் மொபைலில் ப்ளூடுத் ஆன் செய்யப்பட்டிருந்திருக்கிறது என்றும் தேர்தல் அதிகாரி பி.பி.ஸ்வைன் கூறினார்.

அடுத்த செய்தி