ஆப்நகரம்

பாதுகாப்புக்கு வந்த ராணுவ வீரர்களை அன்பால் கட்டிப்போட்ட குஜராத் மக்கள்!

குஜராத் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பிற்காக வந்த ராணுவ வீரர்களுக்கு கர்பா நடனமாடி குஜராத் மக்கள் வழியனுப்பி வைத்துள்ளனர்

TNN 16 Dec 2017, 7:52 pm
குஜராத்: குஜராத் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பிற்காக வந்த ராணுவ வீரர்களுக்கு கர்பா நடனமாடி குஜராத் மக்கள் வழியனுப்பி வைத்துள்ளனர்.
Samayam Tamil gujaratis throw garba party for jawans on election duty
பாதுகாப்புக்கு வந்த ராணுவ வீரர்களை அன்பால் கட்டிப்போட்ட குஜராத் மக்கள்!


குஜராத் சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் வரும் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி குஜராத்தில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குஜராத் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முழு வீச்சில் செயல்பட்டனர். மேலும், பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிக்கிமைச் சேர்ந்த துணைராணுவப்படையினர் குஜராத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்து அவர்கள் மீண்டும் சிக்கிம் திரும்பத் தயாராகும்போது, குஜராத்தின் பாரம்பரிய கர்பா நடன நிகழ்ச்சியை அரங்கேற்றி குஜராத் மக்கள் அவர்களை மகிழ்வித்தனர். இதில், உற்சாக மிகுதியில் ராணுவ வீரர்களும் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஆடி மகிழ்ந்தனர்.

விடைப்பெற்று செல்லும்போது, பல மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்பிற்காக சென்றுள்ளோம். ஆனால், இதுபோன்று இதுவரை யாரும் எங்களுக்கு அன்பு செலுத்தியதில்லை என்று நெகிழ்ந்தனர் ராணுவத்தினர்.

அடுத்த செய்தி