ஆப்நகரம்

அனைத்து வழக்குகளிலும் ஹர்திக் பட்டேலுக்கு ஜாமீன்

தேச துரோக வழக்கு உள்பட அனைத்து வழக்குகளிலும் ஹர்திக் பட்டேலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

TOI Contributor 11 Jul 2016, 9:59 pm
அகமதாபாத்: தேச துரோக வழக்கு உள்பட அனைத்து வழக்குகளிலும் ஹர்திக் பட்டேலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil hardik gets bail in visnagar violence case will be out from jail soon
அனைத்து வழக்குகளிலும் ஹர்திக் பட்டேலுக்கு ஜாமீன்


பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடுக்காக போராடி வரும், பட்டிதார் அனாமத் அன்டோலன் சமிதி தலைவர் ஹர்திக் பட்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 9 மாதங்களாக சிறையில் உள்ளார். இவரது போராட்டங்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என கூறி இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஹர்திக் பட்டேல் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும், ஒரு வேளை தான் விடுவிக்கப்பட்டால், அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஹர்திக் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், குஜராத்துக்குள் ஹார்த்திக் பட்டேல் ஆறு மாத காலம் வரக் கூடாது என்று கூறி நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இரண்டு தேச துரோக வழக்குகளில் ஹர்திக் பட்டேலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முனனர் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை சூறையாடிய மற்றொரு வழக்கிலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதில், மெஹ்சானா மாவட்டத்துக்குள் மூன்று மாதத்திற்கு வரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், குஜராத் மாநிலத்துக்குள், ஹார்த்திக் பட்டேல் ஆறு மாத காலம் வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து, ஒன்பது மாதங்களுக்கு பின்னர் ஹர்திக் பட்டேல் சிறையில் இருந்து விடுதலையாகவுள்ளதால், அவராது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாமீன் நடைமுறைகள் முடிந்து இன்னும் ஓரிரு நாட்களில் சிறையில் இருந்து வெளியே வரவுள்ள ஹர்திக் பட்டேலுக்கு, வீட்டில் இருந்து அவரது சாமன்களை எடுத்துக் கொண்டு, மாநிலத்தை விட்டு வெளியேற இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி