ஆப்நகரம்

போக்குவரத்து காவலர்களுக்கு ஹார்லி டேவிட்ஸன்

இந்தியாவில் குஜராத்தைத் தொடர்ந்து கொல்கத்தா போக்குவரத்துக் காவலர்களுக்கும் ஹார்ட்லி டேவிட்ஸன் பைக் வழங்கப்பட்டுள்ளது.

TNN 21 Aug 2017, 2:55 pm
இந்தியாவில் குஜராத்தைத் தொடர்ந்து கொல்கத்தா போக்குவரத்துக் காவலர்களுக்கும் ஹார்ட்லி டேவிட்ஸன் பைக் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil harley davidson for traffic guards
போக்குவரத்து காவலர்களுக்கு ஹார்லி டேவிட்ஸன்

இரு சக்கர வாகன உலகத்தின் ராஜாவாக கருதப்படும் ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் கடந்த 1913ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரு சக்கர வாகனப் பிரியர்களின் கனவு வாகனமாக திகழும் இந்த பைக்கினுடைய இந்திய மதிப்பு ரூபாய். 5.5 லட்சம் ஆகும்.

750cc கொண்ட ஹார்லி டேவிட்சன் பைக்குகள் முக்கியமாக விழாக்கள் மற்றும் அணிவகுப்புகளில் உபயோகிக்கப்படும். மேலும் இதில் போக்குவரத்து காவலர்களின் வாகனத்தில் இருப்பதை போல சைரன் ஒலியும் மற்றும் சிவப்பு, நீல நிற கொண்ட விளக்குகளும் இணைகப்பட்டுள்ளது என கொல்கத்தா போக்குவரத்து துணை ஆணையர் சாலமன் நேசகுமார் கூறியுள்ளார்.

Harley Davidson for traffic guards

அடுத்த செய்தி