ஆப்நகரம்

தனியார் துறையில் வேலைவாய்ப்பு; உள்ளூர் மக்களுக்கு இப்படியொரு சூப்பர் சலுகை!

வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநில அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது.

Samayam Tamil 6 Nov 2020, 6:20 am
இந்தியா இதுவரை கண்டிராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறது. பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே பொதுமக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் ஹரியானா மாநில அரசு அதிரடியாக நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. தங்கள் மாநிலங்களில் தனியார் துறையில் இருக்கும் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவை சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றியுள்ளது.
Samayam Tamil Haryana Local Jobs


இது மாதம் ரூ.50,000க்கு கீழ் சம்பளம் வாங்கும் வேலைவாய்ப்புகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனியார் நிறுவனங்கள், ட்ரஸ்ட்கள், தொழில் நிறுவனங்கள், சொசைட்டிகள் உள்ளிட்டவை பின்பற்றி நடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் சட்டமாக மாறி அமலுக்கு வந்துவிடும். இது இளைஞர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்திருக்கிறது. உறவுகளைப் பிரிந்து வெளியூருக்கு சென்று அல்லல்படும் நிலை, இனி ஹரியானா மக்களுக்கு இல்லை.

இதுவே என் கடைசி தேர்தல்; பிரச்சாரத்தில் நிதிஷ் குமார் பரபரப்பு!

இது ஹரியானாவை ஆளும் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள ஜனயாக் ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மக்களவை எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான ரவிக்குமார் எம்.பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், தனியார் துறையில் உள்ள வேலைகளில் 75% ஐ சொந்த மாநிலத்தவருக்கே வழங்க வேண்டுமென ஹரியானா மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசும் ஏன் அப்படியொரு சட்டத்தை இயற்றக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி